Wednesday, 6 August 2008

என் மேல் கோபமா?

மழைக்காக தவமிருந்து
மழைவரும் வேளையில்
ஓடோடி வந்தேன்
குதூகலமாய் மழையில் நனைய..


குதூகலம் நீடித்தது
முதல் துளி என் மீது
விழும் வரை மட்டுமே ..


மழையை எதிர்த்து
கறுப்புக் கொடி காட்டினேன் ,
மனதில் குதூகலத்துடன் ..


தோழிகள்,
கைகொட்டி சிரித்தனர்
“போடி இரு மனசுக்காரி,
மழையில் நனைய ஆசை
ஆனால்,
உடுத்திய துணி நனையக்கூடாதென்று
குடை பிடிக்கிறாய் என்று.. ”


பொய்யாக அவர்களை
கடிந்து கொண்டு
என் அறையின் கண்ணாடியைப்
பார்த்துக் கேட்டேன்
“எனதருமை இரண்டாவது மனமே..
என் மேல் கோபமா?
உனக்கு மழையில் நனைந்தால்
காய்ச்சல் அதிகரிக்குமென்று
மருததுவர் சொன்னதை
மறந்தேனென்று கோபமா?
என்னை மன்னித்து வீடு
நீ செளக்கியம் தானே?


நன்றி,
நாணல்