சாலையின் இருபுறத்தின்
வீடுகளுக்கிடையேயான இடைவெளிகள்
அதிகமாயியன....
பக்கத்து வாசலின்
அழைப்புஒலி உட்புகாதபடி
குளிரூட்டப்பட்ட அறையில் வாசமாயினோம்....
லிஃப்டின் ஓரிரு நிமிட
பயணங்களிலும் முகம் பார்த்து
மலற மறுக்கின்றோம்....
வார விடுமுறையில் களைப்பார
உண்டு தூங்கியே
கழிக்கின்றோம்....
நம் பளு குறைக்க கண்டுபிடித்த
இயந்திரத்திற்கு பதிலாக
நாமே இயந்திரமானோம்....
வெற்றியைக் காரணம் காட்டி
அன்பினை
தவிர்க்கின்றோம்....
இயற்கையோடினை
மானுடத்துக்கு மரியாதை செய்
பாசத்திற்கு கட்டுபட்டு
உன்னத வாழ்வை வாழ்
உண்மையான வாழ்வை வாழ்
-நன்றி
நாணல்
13 comments:
கவிதை நல்லாயிருக்குங்க.....
//வார விடுமுறையில் களைப்பார
உண்டு தூங்கியே
கழிக்கின்றோம்....//
அப்புறம் என்னாங்க பண்ணுறது,,,,,,,,,,,,
இயற்கையை மறுத்து செயற்கையைக் கை கொள்ளும் பழக்கம் மாறுமா?
பலு அல்ல பளு.. :)
yathaarththam....
anal kadaisiyila thathuvamthan namakku sari vara maadden enkuthe enna seiya..?
//லிஃப்டின் ஓரிரு நிமிட
பயணங்களிலும் முகம் பார்த்து
மலற மறுக்கின்றோம்....
//
உண்மைதான்!:(((
அன்பின் நாணல்
அழகான கவிதை
அருமை அருமை
இன்றைய இய்நதிர வாழ்வினை
அழகாக வடித்திருக்கிறீர்கள்
நல்வாழ்த்துகள்
நல்ல சிந்தனை.
நாகரீக உலகத்தில், நாகரீக(என நினைத்து கொள்ளும்) மக்கள்.
அருகாமையில் நட்பு பாராட்டாமல்
வெளியே தேடிக்கொண்டிருப்பவர்கள்
\\நம் பளு குறைக்க கண்டுபிடித்த
இயந்திரத்திற்கு பதிலாக
நாமே இயந்திரமானோம்....\\
நச் வரி.
//நம் பலு குறைக்க கண்டுபிடித்த
இயந்திரத்திற்கு பதிலாக
நாமே இயந்திரமானோம்....//
நிகழ்கால வாழ்க்கையின்
நிதர்சனமான வரிகள்...
நன்றாக உள்ளது
நானும் அவ்வளவு தாங்க வசந்த்... :(
திருத்திட்டேன் தமிழ் அண்ணா...:)
நன்றி மயாதி ...:)
ஆமாம் ஆயில்யன் அண்ணா... :( என்ன பண்றது...
நன்றி சீனா... :)
நன்றி ஜமால் ...:)
நன்றி புதியவன்....:)
நன்றி கவிக்கிழவன்... :)
உங்களின் ப்லோக்கேருக்கு நான் வருவது முதல் முறை..
கவிதைகள் சூப்பர்..அருமை.
நம் பளு குறைக்க கண்டுபிடித்த
இயந்திரத்திற்கு பதிலாக
நாமே இயந்திரமானோம்....
வெற்றியைக் காரணம் காட்டி
அன்பினை
தவிர்க்கின்றோம்....
உண்மைதான் நாணல்
காலமாற்றத்தில் இப்பொழுது உண்மையான அன்பு கூட அருகிவிட்டது
இயந்திரதனமான வாழ்கை பழகிவிட்டது
நன்றி வியா, முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்... :)
ஆமாம் சக்தி அண்ணா..என்ன செய்ய... :(
:-)
நல்லாயிருக்குங்க!
Post a Comment