பிறந்து என்ன சாதித்தாய்
என என்னை
பல முறை கேட்டுக்கொண்டு
விடையில்லையெனினும் ,
என் பிறந்த நாள்
எனக்கு பிடிக்கும்
என்னை வாழ்த்தும்
அத்தனை
அன்பு உள்ளங்களுக்காக!
கடல் தாண்டி போகின்றோம்
உள்ளங்களின் தொடர்பற்று
தனிமையில் தான்
இந்த ஆண்டு கழியவேண்டுமா
என கடவுளிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்!
கடவுளும் தொழில்நுட்பமும்
கைகோர்த்து
என் தோழனிடமிருந்து
முதல் வாழ்த்தெனும் பரிசோடு
ஆரம்பித்தது,
என்றோ யாருக்கோ
இணையம் பழகிய நாளில்
நான் அனுப்பியிருந்த வாழ்த்து மடலின்
மறு உருவமாய்
இசையோடு என்னை வாழ்த்திய
மற்றுமொரு தோழனின்
வாழ்த்து மடல்!
உறங்கிப் பின் எழுந்து
நேரத்திற்காய் காத்திருந்து
அழைத்து வாழ்த்து சொன்ன தோழி!
நேர வேற்றுமை புரிந்ததால்
நாளை உன் தேதியில்
உனக்கு வாழ்த்துகிறேன்
என சொல்லாது
சொன்ன தோழன்!
இன்று உனக்கு
பிறந்த நாளா
நாளை உனக்கு
பிறந்த நாளா என
குழம்பிய நிலையில்
இரண்டும் நாளும் வாழ்த்திய பெற்றோர்!
தொலைபேசியிலும் இணையத்திலும்
தொடர்பு கொள்ள் முடியாமல்
என் அழைப்பிற்காக காத்திருந்து
வாழ்த்து சொன்ன தோழிகள்!
பதிவில்
முதல் வாழ்த்துப்பதிவிட்ட
அண்ணன !
என்றோ நான்
செய்த குறும்பை
நினைவூட்டி எனக்கு வாழ்த்துப்பதிவிட்ட
தங்கை !
மின்மடல்களாய் வந்திறங்கிய
வாழ்த்துக்கள் !!
ஃபேஸ்புக்கில் வாழ்த்திய
எழுத்து முகங்கள் மட்டுமே தெரிந்த நட்பு !
என
முதன் முறை
இரண்டு நாளாய்
என் பிறந்த நாள்
முடிகையில்,
யாரேனும் என்னைக் கேட்டால்
சொல்வேன் தைரியமாய்
நான் சாதித்தது என்ன வென்று!
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி,
வாழ்த்தும் நண்பர்களை உறவை அளித்த
கடவுளுக்கும் நன்றி!
பி.கு: பொறுமையா இந்த பதிவை படிச்ச உங்களுக்கும் நன்றி, இந்த இரண்டு நாள் எனக்கு தந்த அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்த பதிவு. யாரையும் விட மனமில்லாது என் நினைவிலிருந்த அனைவரிடமும் ஒரே நாளில் பேசிய மகிழ்ச்சியை பதிவாயிடுகிறேன்.
நன்றி,
நாணல்