Sunday, 31 May 2009

என் விடியல்...

எங்கோ ஓடி
எங்கெங்கே தேடினாலும்
உந்தன் முகம் தானம்மா
என் விடியல்...

நீ மீண்டும் வருவாய்
என்று தானே
என் இரவைக் கழிக்கின்றேன்...

மேகம் மறைத்து
நீ மறைந்தாலும்
உன் கண்ணீரால் தானே
என் ஜீவனை வளர்க்கின்றேன்...

உலகே இன்று
எனக்கு சொந்தம்
உன்னால்...
உன் சொந்தம்?

என்னை நீ
ஜீவித்தது போதுமம்மா
உன் மூச்சாக
நான் இருப்பேனோ தெரியாது
உன் வாழ்நாள் தோறும்
நான் இருப்பேன்!

தாயே
உன்னால் நான் பெற்ற
வெற்றியின் மீது ஆணை !


- நன்றி!
நாணல்


18 comments:

Suresh said...

நாணலாய் திரும்ப வந்து ;) கல்க்கிடிங்க ... பெயரை போல் நாணல் ....

வாழ்த்துகள்

Suresh said...

remove word verification

நாணல் said...

நன்றி சுரேஷ்... word verification ஐ எடுத்துட்டேன்...

Thamiz Priyan said...

இனியாவது நல்லதா நாலு கவிதை, கதை எழுதும்மா... Lol.. வாழ்த்துக்கள் நாணல்!

Thamiz Priyan said...

முதல் கவிதை அம்மாவுக்கு சமர்ப்பணமா? அழகா இருக்கு! (உண்மையில் படிச்சிட்டேனே.. ;-)) )

ஆயில்யன் said...

//என்னை நீ
ஜீவித்தது போதுமம்மா
உன் மூச்சாக
நான் இருப்பேனோ தெரியாது
உன் வாழ்நாள் தோறும்
நான் இருப்பேன்!
//

குட்!

வாழ்த்துக்கள் :)

நாணல் said...

:) கண்டிப்பா தமிழ் அண்ணா... :))

நன்றி ஆயில்யன் அண்ணா.. :)

கவிக்கிழவன் said...

இலங்கையில் இருந்து யாதவன்

உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்

Ungalranga said...

தாய்க்கு எப்போதும் தன் பிள்ளை தான் உலகம்..

உங்கள் தாயின் அன்பு எப்போதும் உண்டு உங்களுக்கு..

நல்ல கவிதை!
வாழ்த்துக்கள்..!!

நாணல் said...

// கவிக்கிழவன் said...

இலங்கையில் இருந்து யாதவன்

உங்கள் படைப்பு நன்றாக உள்ளது
அருமையான வரிகள்//

நன்றி யாதவன் :)

//ரங்கன் said...

தாய்க்கு எப்போதும் தன் பிள்ளை தான் உலகம்..

உங்கள் தாயின் அன்பு எப்போதும் உண்டு உங்களுக்கு..

நல்ல கவிதை!
வாழ்த்துக்கள்..!!//

நன்றி ரங்கன் ... :)

Muthusamy Palaniappan said...

Good one.,

sakthi said...

எங்கோ ஓடி
எங்கெங்கே தேடினாலும்
உந்தன் முகம் தானம்மா
என் விடியல்...

கண்டிப்பாக அம்மாவின் முகம் தான் விடியல் நமக்கு

உங்களின் பழைய தளம் பார்த்திருக்கிறேன் அதை நீங்கள் இழந்து வீட்டிர்கள் என நினைக்கிறேன்

உங்களின் புதிய தளம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மீண்டும் உங்கள் கவிதை பணி தொடரட்டும்

வாழ்த்துக்கள் சகோதரி

நட்புடன் ஜமால் said...

\\நீ மீண்டும் வருவாய்
என்று தானே
என் இரவைக் கழிக்கின்றேன்...\\


அருமை வரிகள்

ஒரு தாயின் உணர்வு
(எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது)

குழந்தைக்கும் வரலாம்.

நாணல் said...

// sakthi said...

எங்கோ ஓடி
எங்கெங்கே தேடினாலும்
உந்தன் முகம் தானம்மா
என் விடியல்...

கண்டிப்பாக அம்மாவின் முகம் தான் விடியல் நமக்கு

உங்களின் பழைய தளம் பார்த்திருக்கிறேன் அதை நீங்கள் இழந்து வீட்டிர்கள் என நினைக்கிறேன்

உங்களின் புதிய தளம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

மீண்டும் உங்கள் கவிதை பணி தொடரட்டும்

வாழ்த்துக்கள் சகோதரி//

உங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி அண்ணா.. :)

நாணல் said...

//நட்புடன் ஜமால் said...

\\நீ மீண்டும் வருவாய்
என்று தானே
என் இரவைக் கழிக்கின்றேன்...\\


அருமை வரிகள்

ஒரு தாயின் உணர்வு
(எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது)

குழந்தைக்கும் வரலாம்.//
ஆமாம் ஜமால்..தாயைப் போல் தானே பிள்ளையும்...

meena said...

தாயே
உன்னால் நான் பெற்ற
வெற்றியின் மீது ஆணை !

நல்ல வரியில் முடித்திருக்கிறீர்கள். கவிதை அழகு.

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,


நன்றி
தமிழர்ஸ்.காம்
Tamilers Blog

நாணல் said...

நன்றி மீனா... :)
நன்றி தமிழர்ஸ் ... :)