Friday, 14 August 2009

யாதுமானவனே...

பிறந்தநாள் முதலாய்
பல வகை
கலன்களை அணிந்திருக்கிறேன்
இன்றைக்கு மட்டும் ஏதோ
புதுவித உணர்வு என்னுள்...

நீ
கட்டிய மஞ்சள் தாலிக்குள் தான்
என் வாழ்க்கை உள்ளதோ..

நீ
போட்ட மூன்று முடிச்சுகள்
சொன்னது 'நீ மூவுலகிற்கும்
சொந்தமானவளென்று'

பொன்னாலான தாலியை
சுமக்கிறேன் இன்று முதல்
என் நெஞ்சுக்குள்...
நீ
மட்டுமே இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள்
வெகுநாள் முதலாய்...

நீ
சூட்டிய செந்தூரம்
சொன்னது 'என்
உதிரத்தினுள் நீ கலந்தாயென'

என் வலிகள் அனைத்தையும்
உன்
விழிகள் பார்த்து மறக்கின்றேன்..

என் சொந்தங்கள் அனைத்தையும்
உன்
உருவில் பார்த்து மயங்குகின்றேன்..

என் வாழ்வின்
மொத்தம் உணர்கின்றேன்
நீ
தந்த அந்த ஒற்றை
முத்தத்தில்..

நீ
தந்த இத்தனை பரிசுக்கு
பதிலாய் வெட்கித்தலை குனிகிறேன்,
உனக்குத் தரவேண்டி
சேகரித்த
என் வாழ்க்கையை மறந்து ...


நன்றி,
நாணல்

19 comments:

ஊர்சுற்றி said...

இந்த தாலியெல்லாம் தேவைதானா?

Thamiz Priyan said...

தங்கச்சி... முன்னமே சொல்றது இல்லியா? ;-)

வேதன் said...

சொல்லவே இல்ல?

Thamiz Priyan said...

///ஊர்சுற்றி said...

இந்த தாலியெல்லாம் தேவைதானா?///
தாலி என்பது அடிமையின் அடையாளமாக ஆண்களால் மட்டுமே காட்டப்படுகின்றது. பெண்களுக்கு அது ஒரு மனதிற்குப் பிடித்த அடையாளம். எனவே அதைப் பற்றி ஆண்களாகிய நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நட்புடன் ஜமால் said...

என் வலிகள் அனைத்தையும்
உன்
விழிகள் பார்த்து மறக்கின்றேன்..]]


அழகு.

நட்புடன் ஜமால் said...

உனக்குத் தரவேண்டி
சேகரித்த
என் வாழ்க்கையை மறந்து ...]]

அற்புதம்

தேவன் மாயம் said...

நீ
தந்த இத்தனை பரிசுக்கு
பதிலாய் வெட்கித்தலை குணிகிறேன்,
உனக்குத் தரவேண்டி
சேகரித்த
என் வாழ்க்கையை மறந்து //

முத்தாய்ப்பாய் முடித்துவிட்டீர்கள்!!

ப்ரியமுடன் வசந்த் said...

//நீ
போட்ட மூன்று முடிச்சுகள்
சொன்னது 'நீ மூவுலகிற்கும்
சொந்தமானவளென்று'//

இது உண்மை....

S.A. நவாஸுதீன் said...

என் வலிகள் அனைத்தையும்
உன்
விழிகள் பார்த்து மறக்கின்றேன்.

உனக்குத் தரவேண்டி
சேகரித்த
என் வாழ்க்கையை மறந்து ...

அழகான வரிகள்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பெண்ணியல் பார்வை கவிதை.புதுமணப்பெண்ணின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி விதம் அருமை.

நாணல் said...

ஊர்சுற்றி said...
இந்த தாலியெல்லாம் தேவைதானா?


அட என்ன இப்படி கேட்டுடீங்க...இதற்கு தமிழ் அண்ணா சொன்ன பதிலை ஆமோதிக்கிறேன்...

நாணல் said...

தமிழ் பிரியன் said...

தங்கச்சி... முன்னமே சொல்றது இல்லியா? ;-)

வேதன் said...

சொல்லவே இல்ல?


உங்களுக்கு சொல்லாமலா... இது சும்மா கவிதை மட்டும் தான்... ;)

நாணல் said...

தமிழ் பிரியன் said...

தாலி என்பது அடிமையின் அடையாளமாக ஆண்களால் மட்டுமே காட்டப்படுகின்றது. பெண்களுக்கு அது ஒரு மனதிற்குப் பிடித்த அடையாளம். எனவே அதைப் பற்றி ஆண்களாகிய நாம் கவலைப்பட வேண்டியதில்லை.


அதே அதே .. :)

நாணல் said...

நன்றிங்க ஜமால், தேவா , வசந்த், நவாஸூதீன், துபாய் ராஜா... :))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல ஃப்ளோ!
நன்று!

குனிகிறேன் -சரி

நாணல் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said
நல்ல ஃப்ளோ!
நன்று!

குனிகிறேன் -சரி


நன்றி ஜோதிபாரதி... திருத்திவிட்டேன்... திருத்தியமைக்கு நன்றி... :)

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

தங்கச்சி... முன்னமே சொல்றது இல்லியா? ;-)/

ரிப்பீட்டேய்...!

நிஜமா நல்லவன் said...

/ நாணல் said...

தமிழ் பிரியன் said...

தங்கச்சி... முன்னமே சொல்றது இல்லியா? ;-)

வேதன் said...

சொல்லவே இல்ல?

உங்களுக்கு சொல்லாமலா... இது சும்மா கவிதை மட்டும் தான்... ;)/

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....நான் நிஜம்னு நினைச்சிட்டேன்..:))

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

///ஊர்சுற்றி said...

இந்த தாலியெல்லாம் தேவைதானா?///
தாலி என்பது அடிமையின் அடையாளமாக ஆண்களால் மட்டுமே காட்டப்படுகின்றது. பெண்களுக்கு அது ஒரு மனதிற்குப் பிடித்த அடையாளம். எனவே அதைப் பற்றி ஆண்களாகிய நாம் கவலைப்பட வேண்டியதில்லை./


தல கலக்கிட்டீங்க போங்க!