Wednesday, 10 November 2010

சிவ‌ந்த‌ செடிக‌ள்

முகம் பார்த்து விடிந்த காலம்
ஃபேஸ்புக்கில் முக‌ங்க‌ள் தேடும் கால‌மாய்
திரிந்த‌ பொழுது உண‌ர்கிறேன்
கால‌த்தின் க‌ட்டாய‌த்தை
தொழில்நுட்ப‌த்தின் முன்னேற்ற‌த்தை!

விடிந்த‌தும்,
என் நினைப்போடு
என் அழைப்பிற்காக‌ காத்திருக்கும்
தாயின் முக‌ம் க‌ண்முன் தோன்றுகையில்
தொழில்நுட்ப‌மும் தோற்றுத்தான் போகின்றது!

‘ஊர் பார்த்து வா’
‘புகைப்ப‌ட‌ங்க‌ள் எடுத்து அனுப்பு’
என‌ சொல்லும் ந‌ண்ப‌ர்க‌ளுக்கு
எப்ப‌டி சொல்வேன்
விரிந்த‌ சாலைக‌ளும்
ம‌ர‌த்தாலான‌ வீடுக‌ளும்
சிவ‌ந்த‌ செடிக‌ளும்
குளிர்ந்த‌ ஓடையும்
தொலைக்காட்சியின் காட்சியாக‌வே
வ‌டிவ‌ம் பெறுகின்ற‌ன‌ என!

புது இட‌ம் புதிய‌ அனுப‌வ‌ம்
என்னும் ஒற்றைக் காயை
ந‌க‌ர்த்திக்கொண்டு
ந‌ம்மூர் வ‌ரும் நாளுக்காக‌
ஏங்கிக்கொண்டு
உற‌வையும் ந‌ட்பையும்
எண்ணிக்கொண்டு
கால‌மும் ந‌க‌ர்கின்ற‌ன‌!

ந‌ன்றி,
நாண‌ல்

No comments: