தவறி செய்த தவறும்
மறுத்துப்போகக்கூடும்;
பாதித்தவரின் பெருந்தன்மையால்
ஆறுதலையும் பெற்றுவிடக்கூடும்;
என்
தவறுகளை
மன்னிப்புக் கண்ணீராய்
உரு மாற்றினால்!
மாறாக
யாருக்கும் புலப்படாத
மௌனச்சாட்டையாகவே
மாற்ற விரும்புகிறேன்,
தவறுகள் மறந்தாலும்
சாட்டையடி தந்த வலி
மறவாது எனவே!
புரியாது செய்பவை
பிழையென
பிழைத்துக்கொள்ளக்கூடும்,
புரிந்தும் புரியாது
செய்தவை
மன்னிப்பற்று
மன்னிப்புக்கேட்கும் தகுதியற்று
துண்டித்து விடப்பட்டால் ஒழிய
‘தவறுகள் இல்லாத
நாளொன்றின்
பிம்பம் ஜனிக்காது’
எனும் படிப்பினையோடு
தவறுகள் செய்யாத
நாளொன்றுக்காய்
செதுக்கிக்கொண்டிருக்கிறேன்
என்னை தினமும்!
நன்றி,
நாணல்
No comments:
Post a Comment