Friday, 14 August 2009

யாதுமானவனே...

பிறந்தநாள் முதலாய்
பல வகை
கலன்களை அணிந்திருக்கிறேன்
இன்றைக்கு மட்டும் ஏதோ
புதுவித உணர்வு என்னுள்...

நீ
கட்டிய மஞ்சள் தாலிக்குள் தான்
என் வாழ்க்கை உள்ளதோ..

நீ
போட்ட மூன்று முடிச்சுகள்
சொன்னது 'நீ மூவுலகிற்கும்
சொந்தமானவளென்று'

பொன்னாலான தாலியை
சுமக்கிறேன் இன்று முதல்
என் நெஞ்சுக்குள்...
நீ
மட்டுமே இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள்
வெகுநாள் முதலாய்...

நீ
சூட்டிய செந்தூரம்
சொன்னது 'என்
உதிரத்தினுள் நீ கலந்தாயென'

என் வலிகள் அனைத்தையும்
உன்
விழிகள் பார்த்து மறக்கின்றேன்..

என் சொந்தங்கள் அனைத்தையும்
உன்
உருவில் பார்த்து மயங்குகின்றேன்..

என் வாழ்வின்
மொத்தம் உணர்கின்றேன்
நீ
தந்த அந்த ஒற்றை
முத்தத்தில்..

நீ
தந்த இத்தனை பரிசுக்கு
பதிலாய் வெட்கித்தலை குனிகிறேன்,
உனக்குத் தரவேண்டி
சேகரித்த
என் வாழ்க்கையை மறந்து ...


நன்றி,
நாணல்