Wednesday, 10 March 2010

காதலருவி

பருவத்தின் உச்சியில் பிறந்து
நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கி
இன்ப துன்பங்களில் உழன்று
வழி நெடுக்க உயிர் கொணர்ந்து
சலசலக்கும் கூ(ஊ)டலோடு இசைபறப்பி
வாழ்க்கைக் கடலின் அமைதியான நடுக்கடலில்
நிலவோடு போட்டிக்கொண்டு
அமைதியாக பயணிக்கிறது நம் காதல்

நன்றி
நாணல்