Thursday, 25 February 2010

உன்னைப் பிரியும் வரை…

“மாற்றம் என்பது மானிட தத்துவம்
மாறாதிருக்க யான் வனவிலங்கல்லன்”
என்ற கண்ணதாசன் கூற்று
மெய்யெனப்பட்டது
உன்னைப் பிரியும் வரை…


பெற்றவர்களுக்கு மட்டுமே
இப்பூவுலகில்
மாற்று இல்லையென
நம்பியிருந்தேன்
உன்னைப் பிரியும் வரை…


நீயில்லையெனினும்
என் ஜீவன் ஓடுமென
பெருமைக்கொண்டிருந்தேன்
உன்னைப் பிரியும் வரை…


நன்றி,
நாணல்