’சாக வழியில்லாது
வாழ முடிவெடுத்தேன்
நீயில்லாமல்’
இப்படிக்கு,
புகைப் பிடிக்கும் பழக்கத்தை
விட்டொழிக்கும் நான்!
$%^&*#
புரிதலும்
சில நேரம்
பிரிவதற்கு
வித்திடும்!
$%^&*#
வலுவான
நிஜங்களும்
சில நேரம்
பலவீனமாக்கும்!
$%^&*#
தனிமையும் இனிமையே
நம்மை நேசிப்பவர்கள் தந்தால்
தனிமை கொடுமையே
நாம் நேசிப்பவர்கள்
நம்மை நேசிக்கவில்லையென
தெரிந்தபின்!
நன்றி,
நாணல்
Tuesday, 30 November 2010
Thursday, 25 November 2010
நான் சாதித்தது….
பிறந்து என்ன சாதித்தாய்
என என்னை
பல முறை கேட்டுக்கொண்டு
விடையில்லையெனினும் ,
என் பிறந்த நாள்
எனக்கு பிடிக்கும்
என்னை வாழ்த்தும்
அத்தனை
அன்பு உள்ளங்களுக்காக!
கடல் தாண்டி போகின்றோம்
உள்ளங்களின் தொடர்பற்று
தனிமையில் தான்
இந்த ஆண்டு கழியவேண்டுமா
என கடவுளிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்!
கடவுளும் தொழில்நுட்பமும்
கைகோர்த்து
என் தோழனிடமிருந்து
முதல் வாழ்த்தெனும் பரிசோடு
ஆரம்பித்தது,
என்றோ யாருக்கோ
இணையம் பழகிய நாளில்
நான் அனுப்பியிருந்த வாழ்த்து மடலின்
மறு உருவமாய்
இசையோடு என்னை வாழ்த்திய
மற்றுமொரு தோழனின்
வாழ்த்து மடல்!
உறங்கிப் பின் எழுந்து
நேரத்திற்காய் காத்திருந்து
அழைத்து வாழ்த்து சொன்ன தோழி!
நேர வேற்றுமை புரிந்ததால்
நாளை உன் தேதியில்
உனக்கு வாழ்த்துகிறேன்
என சொல்லாது
சொன்ன தோழன்!
இன்று உனக்கு
பிறந்த நாளா
நாளை உனக்கு
பிறந்த நாளா என
குழம்பிய நிலையில்
இரண்டும் நாளும் வாழ்த்திய பெற்றோர்!
தொலைபேசியிலும் இணையத்திலும்
தொடர்பு கொள்ள் முடியாமல்
என் அழைப்பிற்காக காத்திருந்து
வாழ்த்து சொன்ன தோழிகள்!
பதிவில்
முதல் வாழ்த்துப்பதிவிட்ட
அண்ணன !
என்றோ நான்
செய்த குறும்பை
நினைவூட்டி எனக்கு வாழ்த்துப்பதிவிட்ட
தங்கை !
மின்மடல்களாய் வந்திறங்கிய
வாழ்த்துக்கள் !!
ஃபேஸ்புக்கில் வாழ்த்திய
எழுத்து முகங்கள் மட்டுமே தெரிந்த நட்பு !
என
முதன் முறை
இரண்டு நாளாய்
என் பிறந்த நாள்
முடிகையில்,
யாரேனும் என்னைக் கேட்டால்
சொல்வேன் தைரியமாய்
நான் சாதித்தது என்ன வென்று!
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி,
வாழ்த்தும் நண்பர்களை உறவை அளித்த
கடவுளுக்கும் நன்றி!
பி.கு: பொறுமையா இந்த பதிவை படிச்ச உங்களுக்கும் நன்றி, இந்த இரண்டு நாள் எனக்கு தந்த அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்த பதிவு. யாரையும் விட மனமில்லாது என் நினைவிலிருந்த அனைவரிடமும் ஒரே நாளில் பேசிய மகிழ்ச்சியை பதிவாயிடுகிறேன்.
நன்றி,
நாணல்
என என்னை
பல முறை கேட்டுக்கொண்டு
விடையில்லையெனினும் ,
என் பிறந்த நாள்
எனக்கு பிடிக்கும்
என்னை வாழ்த்தும்
அத்தனை
அன்பு உள்ளங்களுக்காக!
கடல் தாண்டி போகின்றோம்
உள்ளங்களின் தொடர்பற்று
தனிமையில் தான்
இந்த ஆண்டு கழியவேண்டுமா
என கடவுளிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்!
கடவுளும் தொழில்நுட்பமும்
கைகோர்த்து
என் தோழனிடமிருந்து
முதல் வாழ்த்தெனும் பரிசோடு
ஆரம்பித்தது,
என்றோ யாருக்கோ
இணையம் பழகிய நாளில்
நான் அனுப்பியிருந்த வாழ்த்து மடலின்
மறு உருவமாய்
இசையோடு என்னை வாழ்த்திய
மற்றுமொரு தோழனின்
வாழ்த்து மடல்!
உறங்கிப் பின் எழுந்து
நேரத்திற்காய் காத்திருந்து
அழைத்து வாழ்த்து சொன்ன தோழி!
நேர வேற்றுமை புரிந்ததால்
நாளை உன் தேதியில்
உனக்கு வாழ்த்துகிறேன்
என சொல்லாது
சொன்ன தோழன்!
இன்று உனக்கு
பிறந்த நாளா
நாளை உனக்கு
பிறந்த நாளா என
குழம்பிய நிலையில்
இரண்டும் நாளும் வாழ்த்திய பெற்றோர்!
தொலைபேசியிலும் இணையத்திலும்
தொடர்பு கொள்ள் முடியாமல்
என் அழைப்பிற்காக காத்திருந்து
வாழ்த்து சொன்ன தோழிகள்!
பதிவில்
முதல் வாழ்த்துப்பதிவிட்ட
அண்ணன !
என்றோ நான்
செய்த குறும்பை
நினைவூட்டி எனக்கு வாழ்த்துப்பதிவிட்ட
தங்கை !
மின்மடல்களாய் வந்திறங்கிய
வாழ்த்துக்கள் !!
ஃபேஸ்புக்கில் வாழ்த்திய
எழுத்து முகங்கள் மட்டுமே தெரிந்த நட்பு !
என
முதன் முறை
இரண்டு நாளாய்
என் பிறந்த நாள்
முடிகையில்,
யாரேனும் என்னைக் கேட்டால்
சொல்வேன் தைரியமாய்
நான் சாதித்தது என்ன வென்று!
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி,
வாழ்த்தும் நண்பர்களை உறவை அளித்த
கடவுளுக்கும் நன்றி!
பி.கு: பொறுமையா இந்த பதிவை படிச்ச உங்களுக்கும் நன்றி, இந்த இரண்டு நாள் எனக்கு தந்த அனுபவங்களின் பிரதிபலிப்பே இந்த பதிவு. யாரையும் விட மனமில்லாது என் நினைவிலிருந்த அனைவரிடமும் ஒரே நாளில் பேசிய மகிழ்ச்சியை பதிவாயிடுகிறேன்.
நன்றி,
நாணல்
வகை
கவிதை,
நன்றி,
பிறந்த நாள் வாழ்த்து
Saturday, 20 November 2010
கண்களின் பரிசு
இந்த வார உயிரோசையில் இந்த கவிதை ... நன்றி உயிரோசை
*****************
உனக்கான தேவைகள்
பூர்த்தியாகும் வரை
என் வேண்டுதல்கள்
மதிக்கப்பட்டன!
உன் வேண்டுதல்கள்
நிஜமாகும் வரை
என் இருத்தல்
கொண்டாடப்பட்டது!
திரைப்படம் முடிந்து
கலையும் கூட்டமென
சொல்லாது மௌனமாய்
நீயும் கலைந்து சென்றாய்!
விமர்சன கல்லெறிதலை
பரிசாகக் கொண்டு
பார்வையாளனால் ஒதுக்கப்பட்ட
கடைசிக்காட்சியாய்
திரையில் ஓடிக்கொண்டிருந்தேன்!
பரிகாசங்கள் மீறிய
உணர்வற்ற நிலையில்
உயிரோடு திரிந்திருந்தேன்!
நானொழிந்த
அடுத்த காட்சியின்
ஒத்திகையில் நீ!
காட்சியின் நிறைவாய்
உன் பெயருக்குப் பின்
வேறொருத்தியின் பெயர்
நிழலாடுகையில்,
நேற்றே இறந்த
பாட்டியின் பிணத்தை எடுக்கையிலே
அணைபடாது வரும் கண்ணீரை
என் கண்களும் பரிசாகக்கொண்டது!
நன்றி,
நாணல்
*****************
உனக்கான தேவைகள்
பூர்த்தியாகும் வரை
என் வேண்டுதல்கள்
மதிக்கப்பட்டன!
உன் வேண்டுதல்கள்
நிஜமாகும் வரை
என் இருத்தல்
கொண்டாடப்பட்டது!
திரைப்படம் முடிந்து
கலையும் கூட்டமென
சொல்லாது மௌனமாய்
நீயும் கலைந்து சென்றாய்!
விமர்சன கல்லெறிதலை
பரிசாகக் கொண்டு
பார்வையாளனால் ஒதுக்கப்பட்ட
கடைசிக்காட்சியாய்
திரையில் ஓடிக்கொண்டிருந்தேன்!
பரிகாசங்கள் மீறிய
உணர்வற்ற நிலையில்
உயிரோடு திரிந்திருந்தேன்!
நானொழிந்த
அடுத்த காட்சியின்
ஒத்திகையில் நீ!
காட்சியின் நிறைவாய்
உன் பெயருக்குப் பின்
வேறொருத்தியின் பெயர்
நிழலாடுகையில்,
நேற்றே இறந்த
பாட்டியின் பிணத்தை எடுக்கையிலே
அணைபடாது வரும் கண்ணீரை
என் கண்களும் பரிசாகக்கொண்டது!
நன்றி,
நாணல்
Sunday, 14 November 2010
[கா சொ ஏ ] காதலி தோழியானால்..
உன் தனிமைக்கு
துணையிருக்க
கூட்டத்தில் எனை தொலைத்து
நாமிருவரும் தனிமையில்
தொலையத் தேவையிராது
–00–00–
உன் ஊறுகளின்
பொறுப்பாளியாய் வேடங்கொண்டு
உனை தேற்ற
முயற்சித்து
ஏமாறத் தேவையிராது
–00–00–
உரிமைகளின்
எல்லை வரை தீண்டி
இழந்த தனித்துவத்தை
மீண்டும்
சேகரிக்க தேவையிராது
கா சொ ஏ - 1
நன்றி,
நாணல்
துணையிருக்க
கூட்டத்தில் எனை தொலைத்து
நாமிருவரும் தனிமையில்
தொலையத் தேவையிராது
–00–00–
உன் ஊறுகளின்
பொறுப்பாளியாய் வேடங்கொண்டு
உனை தேற்ற
முயற்சித்து
ஏமாறத் தேவையிராது
–00–00–
உரிமைகளின்
எல்லை வரை தீண்டி
இழந்த தனித்துவத்தை
மீண்டும்
சேகரிக்க தேவையிராது
கா சொ ஏ - 1
நன்றி,
நாணல்
வகை
கவிதை,
காதல் சொல்லி
Wednesday, 10 November 2010
சிவந்த செடிகள்
முகம் பார்த்து விடிந்த காலம்
ஃபேஸ்புக்கில் முகங்கள் தேடும் காலமாய்
திரிந்த பொழுது உணர்கிறேன்
காலத்தின் கட்டாயத்தை
தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை!
விடிந்ததும்,
என் நினைப்போடு
என் அழைப்பிற்காக காத்திருக்கும்
தாயின் முகம் கண்முன் தோன்றுகையில்
தொழில்நுட்பமும் தோற்றுத்தான் போகின்றது!
‘ஊர் பார்த்து வா’
‘புகைப்படங்கள் எடுத்து அனுப்பு’
என சொல்லும் நண்பர்களுக்கு
எப்படி சொல்வேன்
விரிந்த சாலைகளும்
மரத்தாலான வீடுகளும்
சிவந்த செடிகளும்
குளிர்ந்த ஓடையும்
தொலைக்காட்சியின் காட்சியாகவே
வடிவம் பெறுகின்றன என!
புது இடம் புதிய அனுபவம்
என்னும் ஒற்றைக் காயை
நகர்த்திக்கொண்டு
நம்மூர் வரும் நாளுக்காக
ஏங்கிக்கொண்டு
உறவையும் நட்பையும்
எண்ணிக்கொண்டு
காலமும் நகர்கின்றன!
நன்றி,
நாணல்
ஃபேஸ்புக்கில் முகங்கள் தேடும் காலமாய்
திரிந்த பொழுது உணர்கிறேன்
காலத்தின் கட்டாயத்தை
தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை!
விடிந்ததும்,
என் நினைப்போடு
என் அழைப்பிற்காக காத்திருக்கும்
தாயின் முகம் கண்முன் தோன்றுகையில்
தொழில்நுட்பமும் தோற்றுத்தான் போகின்றது!
‘ஊர் பார்த்து வா’
‘புகைப்படங்கள் எடுத்து அனுப்பு’
என சொல்லும் நண்பர்களுக்கு
எப்படி சொல்வேன்
விரிந்த சாலைகளும்
மரத்தாலான வீடுகளும்
சிவந்த செடிகளும்
குளிர்ந்த ஓடையும்
தொலைக்காட்சியின் காட்சியாகவே
வடிவம் பெறுகின்றன என!
புது இடம் புதிய அனுபவம்
என்னும் ஒற்றைக் காயை
நகர்த்திக்கொண்டு
நம்மூர் வரும் நாளுக்காக
ஏங்கிக்கொண்டு
உறவையும் நட்பையும்
எண்ணிக்கொண்டு
காலமும் நகர்கின்றன!
நன்றி,
நாணல்
வகை
கவிதை
Tuesday, 9 November 2010
குடைக்குள் மழை
கேள்விகளின் பதிலாய்
கேள்விகள் பிறக்கையில்
ரசிக்கின்றேன்
கேள்வியின் நாயகனாய்
நீயிருக்கையில்!
உயிரற்ற பூவும்
உயிர் பெறுகின்றது
உன் கரம் தீண்டி
எனக்கு பரிசாகையில்!
குடைக்குள் உன் பெயர்
எழுதியதன் மாயம்
குடைக்குள் மட்டுமே
மழை பொழிவதாய்
உணர்கின்றேன்!
நன்றி,
நாணல்
கேள்விகள் பிறக்கையில்
ரசிக்கின்றேன்
கேள்வியின் நாயகனாய்
நீயிருக்கையில்!
உயிரற்ற பூவும்
உயிர் பெறுகின்றது
உன் கரம் தீண்டி
எனக்கு பரிசாகையில்!
குடைக்குள் உன் பெயர்
எழுதியதன் மாயம்
குடைக்குள் மட்டுமே
மழை பொழிவதாய்
உணர்கின்றேன்!
நன்றி,
நாணல்
வகை
கவிதை
Subscribe to:
Posts (Atom)