Monday, 12 December 2011

இணையான துணை

தீட்டிய திட்டப்பணி
நேரத்தே முடிவுற‌
இரவு பகல் பாராது
தனிப்பட்ட வாழ்க்கை மறந்து
எமக்கு இணையாய்,
சிலநேரம் - இன்னும் அதிகமாய்
உழைக்கும் கன்னியர்களும் உண்டு
எம் திட்டக்குழுவில்!


உழைப்பை அங்கீகரிக்கும்
விருதுகளுக்கான‌
பட்டியலை வாசிக்கையில்
எம் எண்ணிக்கைக்கு இணையாய்,
சிலநேரம் - இன்னும் அதிகமாய்
நிலைக்கும் பெண்டீரும் உண்டு
எம் திட்டக்குழுவில்!


எம்மில் அவர்கள் என்னக்குறைவென
எம் வாழ்க்கைத் துணைவியாக
எமக்காக வாழவிருக்கும்
அவர்களிடமே தட்சனை கேட்கிறீரே
இது
எம்மை விலை பேசுவதற்கு சமமன்றோ!


நன்றி,
நாணல்

2 comments:

நட்புடன் ஜமால் said...

விலை மாதர்களிடம் விலை போகம் மாந்தர்களை என்ன சொல்ல‌

வாழ்வே நீ தான் என்று வரும் துணையின் வரவே பெரிது என்று என்னாதவர்கள், "வரவு" எதிர்ப்பார்க்கின்றனர்

இதைச்சொல்லி சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் செல்லும் எனத்தெரியவில்லை ...

நாணல் said...

:( உண்மை தான் ஜமால்
காலம் தன் பதில் சொல்லக்கூடும்...