Thursday, 25 June 2009

நான் மென்துறை வல்லுநர் ...

வானுயர்ந்த கட்டிடங்களும்

இயற்கை நிறைந்த சூழலும்

கைக்கு அடக்கமாய் கைபேசியும்

தோளில் தொங்கியபடி மடிகணினியும்

பலவங்கி அட்டைகள் அடங்கிய பணப்பையும்

உயிர் வாழ பச்சைக் காய்கறியும்

எப்பொழுதாவது கேட்கும் தாய் மொழியும்

கனவில் எழுப்பும் தாயின் மொழியும்

நிஜத்தில் கேட்கத்துடிக்கும் தந்தையின் மொழியும்

அன்பால் கட்டிவைத்த மனைவியும்

காற்றில் கேட்கும் குழந்தையின் மழலையும்

என்றோ தொலைந்த உறவுகளும்

தோள் கொடுக்கும் தோழமையும்

"அவனுக்கென்ன அதிர்ஷ்டக்காரன்" என ஊராரின் பேச்சும்

சொல்லுமே நீ இழந்ததையும் கொண்டதையும்

நன்றி,

நாணல்






13 comments:

ஆயில்யன் said...

மிக அருமை !

சொல்ல முடியாது போன பிரிவுகள் இழப்புக்கள் ஏராளம் :(

மயாதி said...

ம்ம்ம்....

அவ்வளவுதான் ! புரிந்து கொள்ளுங்கள்...

Muthusamy Palaniappan said...

Good one

நட்புடன் ஜமால் said...

\\அவனுக்கென்ன\\

இந்த நிலை பெற நாம் இழந்தவைகள் மிக அதிகம் ...

அந்த வலிகளை விட ...

இப்படி கேட்பவர்களின் மொழி தரும் வலி அதிகமே ...

சென்ஷி said...

மென் துறை வல்லுனருக்கு மாத்திரம்தான் இந்த வலிகள் சொந்தமா நாணல்?!

நாணல் said...

//ஆயில்யன் said...
மிக அருமை !

சொல்ல முடியாது போன பிரிவுகள் இழப்புக்கள் ஏராளம் :(//

nijam thaan anna..pattiyal neendu konde thaan pogindrandhu..enna seyya izhakkirom endru therindhum veliyil vara mudiyatha soozhnilai .. :(

//நட்புடன் ஜமால் said...
\\அவனுக்கென்ன\\

இந்த நிலை பெற நாம் இழந்தவைகள் மிக அதிகம் ...

அந்த வலிகளை விட ...

இப்படி கேட்பவர்களின் மொழி தரும் வலி அதிகமே ...//

unmai thaan jamaal...

நாணல் said...

// சென்ஷி said...
மென் துறை வல்லுனருக்கு மாத்திரம்தான் இந்த வலிகள் சொந்தமா நாணல்?!//

appadi ellam illai na.. ella thuraiyil iruppavargalukkum indha vali undu..oppukkolgiren.. aanal perumpanmaiyaaga men thurai irupadhanal andha thalaippitten...

sakthi said...

அன்பால் கட்டிவைத்த மனைவியும்

காற்றில் கேட்கும் குழந்தையின் மழலையும்

என்றோ தொலைந்த உறவுகளும்

உண்மையான வரிகள்

நாணல்

கலையரசன் said...

அருமையா எழுதுறீங்களே, அட மெய்யாலுமே!
தொடருங்கள்... வாழ்த்துக்கள்!!
ஓட்டும் போட்டாச்சு..

na.jothi said...

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கும்
இந்த கவிதை பொருந்துகிறது

இதை தானே சொல்ல வந்தீங்க சென்ஷி

இந்த கவிதை போன்று
http://punnagai-ennavilai.blogspot.com/2009/05/blog-post_06.html

ப்ரியமுடன் வசந்த் said...

இது தானா வந்ததா?

இல்லயில்ல அவங்களா வாங்கிகிட்டது தான.....

அழகான கவிதை நாணல்

Thamiz Priyan said...

வெளிநாட்டில் இருக்கும் எங்களைப் போன்றவர்களால் இந்த வலியை அதிகம் உணர முடியும்..:(

நாணல் said...

தானா தேடிக்கிட்டது தான் வசந்த்... ஆனால் என்ன செய்ய பிழைப்பு ஓடனுமே... :(

ஆமாம் தமிழ் அண்ணா.. :(

நன்றி சக்தி, கலையரசன், J...