Friday, 5 June 2009

'படிகட்டில் பயணம் செய்யாதே' - சங்கமம் - பேருந்து போட்டிக்காக


'படிகட்டில் பயணம் செய்யாதே'
பேருந்தில் ஏறும்போதே எழுதியிருக்கும்....

இவன்
படித்த அறிவாளியாம்
நாகரீகம் தெரிந்தவனாம்
ஆதலால் பயணம்
படிகட்டில் மட்டுமே....

பிறர் கண்பார்வை
தன்மீது பட்டுவிட்டால்
தன்னை தலைவனென்றே எண்ணுவான்
குயிலென்றும் மயிலென்றும்
பகற்கனவு கண்டு துள்ளிக்குதிப்பான்

பின்னொரு நாள்
கைகால் கட்டோடு பேருந்தில் ஏறுவான்
பிறர் பார்வை தன்மீது படாதோ....
எவரேனும் தனக்கு இடம் தரமாட்டாரோ ....
என எண்ணி நிற்க
அன்று புரியும்
'படிக்கட்டில் பயணம் செய்யாதே'

படம் : http://www.hindu.com/2005/11/16/stories/2005111616660300.htm

8 comments:

கவி அழகன் said...

இலங்கையில் இருந்து யாதவன்

உங்கள் படைப்பு நன்றாக உள்ளது

Thamiz Priyan said...

பழைய பதிவில் என்ன கமெண்ட் போட்டேன்னு மறந்துட்டேனே.. சரி சரி Moral of the kavithai.. படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள்.

நட்புடன் ஜமால் said...

அன்று புரியும் ...

ஆ.சுதா said...

ஆம் அன்று புரிந்து விடும்.

நாணல் said...

நன்றி கவிக்கிழவன்..

:) நன்றிங்க அண்ணா...

உண்மை தான் ஜமால் , முத்துராமலிங்கம்

மாதேவி said...

நல்ல பதிவும் படமும்.பயணம் செய்வோர் சிந்திப்பார்களா?

Joe said...

படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்வது இளைஞர்கள் செய்யும் தவறு தான்.

But you tend to forget the other side of the story.

sliding doors கொண்ட பேருந்துகளை மட்டும் இயக்கினால், கூட்டத்துக்கு தகுந்தவாறு பேருந்துகளின் எண்ணிக்கையை அரசாங்கம் பெருக்கினால், இந்த பிரச்சினையை முற்றிலும் சரி செய்து விடலாம்.

நாணல் said...

சிந்தித்தால் நல்லா இருக்கும் மாதேவி...

உண்மை தான் ஜோ.. ஆனால் என் ஆதங்கமே, இடம் இருந்தும் தொங்கும் இளைஞ்சர்களைப் பற்றியது ... :((