புன்னகை மறந்த
இதழ்களுக்கு
புன்னகை பரிசளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
நீ புன்னகைக்க
பரிசளிப்பரென்று...
மலறாத முகங்களுக்கு
மலர வாய்ப்பளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
நீ மலர
வாய்ப்பளிப்பரென்று...
சோர்ந்த விழிகளுக்கு
வியப்பளிக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
உனை
வியக்கவைப்பரென்று...
உடைந்த நெஞ்சங்களுக்கு
உயிர் கொடுக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
உனை
உயிர்க்கவைப்பரென்று ...
-நன்றி,
நாணல்
7 comments:
முதல் மற்றும் கடைசி பத்தி
வெகுவாக இரசித்தேன்
//உடைந்த நெஞ்சங்களுக்கு
உயிர் கொடுக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
உனை
உயிர்க்கவைப்பரென்று ...//
இந்த விதி வெகு அழகு...
உனை
உயிர்க்கவைப்பரென்று ...
நல்லா இருக்குங்க..
இன்நேரம் நியூட்டன் இருந்திருக்கனும்:))
உடைந்த நெஞ்சங்களுக்கு
உயிர் கொடுக்க
மறப்பதில்லை
அந்நேரம் எவரேனும்
உனை
உயிர்க்கவைப்பரென்று//
அருமை..
நன்றி ஜமால்... :)
நன்றி புதியவன்... :)
நன்றி கவிக்கிழவன் ... :).
நன்றி பூர்னிமா... :)
நியூட்டன் இருந்திருந்தா கடுப்பாயிருப்பாரு சொல்றீங்களா... ;)
Post a Comment