Tuesday 28 December 2010

இயற்கை வாழ்வு

தன் தங்கக் கிரணங்களைக்
காற்றோடு உறவாடி,
கிரணன்
இசைப் பரப்பிக் கொண்டிருக்க,
கற்றவன் பண்பின் அடையாளமாய்
தலை சாய்ந்த உயிரின்
சிரத்தில்
ஒன்றோடு ஒன்று
பேசிக் கொண்டிருந்தன
நெல் மணிகள் !


மண்ணின் களை மாறாது
களையறுத்துக் கொண்டிருந்தாள்
செல்லாத்தாள் பாட்டி...


தென்றலின் கிளையாக
தன் கிளைமலருக்காய்
தாலாட்டு பாடிக் கொண்டிருந்தாள்
கமலாக்கா...


புல்லுக்கு உயிராய்
ஒடிக்கொண்டிருந்த
வாய்க்கால் நீரை வெட்டி
பயிருக்கு பாய்ச்சிக்கொண்டிருந்தார்
கந்தவேல் மாமா...


அவரவர் வேலை முடிந்ததும்
உழைத்த களைப்பாற
கட்டிய சோறை
உற்சாகமாய்
உண்டு் களித்தனர்...


எரிந்த கதிரவனுக்கு
விடைகொடுத்து
தணிந்த நிலவினை
தூரிகையால் வறவேற்றுக் கொண்டிருந்தார்
ஓவியர்
சென்னையின் அண்ணா சாலையில்...


நன்றி உயிரோசை..


நன்றி,

நாணல்


No comments: