Showing posts with label யூத் விகடன். Show all posts
Showing posts with label யூத் விகடன். Show all posts

Tuesday, 16 March 2010

கள்ளன்... யூத்ஃபுல் விகடனில்




இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..


http://youthful.vikatan.com/youth/Nyouth/nanalpoem1503010.asp

கள்ளன்...



முன்னிரவின் கள்ளமில்லா
வெள்ளைநிலவின் ஒளியில்
கள்ளச்சிரிப்புடன்
கொள்ளைக்கொண்ட நீ
எந்தன் துயில் நீக்கும்
வேகத்தடையோ…

விழித்தெழுந்துப் பார்க்கையிலே
அமாவாசையின் இருட்டில்
உன் கள்ளச்சிரிப்பு
என் மேல் மையல் கொண்டுள்ளது

தூக்கத்தடைகள் கொண்ட கனவுலகத்தை
மீண்டும் தழுவுகிறேன் அன்பே...
கள்ளன் உன் தரிசனம் வேண்டி..!



நன்றி,
நாணல்

Tuesday, 28 July 2009

மனங்களின் பரிமாற்றங்கள்...- - யூத்ஃபுல் விகடனில்

இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..

http://youthful.vikatan.com/youth/nanalpoem28072009.asp

மனங்களின் பரிமாற்றங்கள்...

காதலிக்கிறேனென என்
கரங்கள் தீண்டியதில்லை நீ...
பரிசுகள் பலதந்து எனை
அதிர்ச்சியில் ஆழ்த்தியதில்லை நீ...
ஆசை மொழிகள் பேசி எனக்கு
வெட்கம்தனை அறிமுகப்படுத்தியதில்லை நீ...

கண்ணுக்கு புலப்படா
நம்மிரு மனங்கள்
என்ன பரிமாறிக்கொண்டனவோ...

உன்னொருத்தனுக்காகவே என்னுள்
நாணம் பூக்கின்றது...
உன்னொருத்தனுக்காகவே பரிசுப்பொருட்கள்
பலதை சேமிக்கின்றேன்...
உன்னொருத்தனின் கைப்பற்றவே
வாழ்நாள் தோறும் காத்திருக்கின்றேன்...

நம் மனங்களின் பரிமாற்றங்கள்
உனக்கேனும் தெரிந்தால்
எனக்கு புலப்படுத்துவாயா?

நன்றி,

நாணல்




Saturday, 27 June 2009

என்னை விட்டு பிரியாதே - யூத்ஃபுல் விகடனில்

இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..

http://youthful.vikatan.com/youth/nanalpoem27062009.asp

என்னை விட்டு பிரியாதே

வானவில் தோன்றவில்லை
மின்னல்கள் ஒளிரவில்லை
மழைச்சாரலும் அடிக்கவில்லை
புகையினூடே நீ வெளிவரவில்லை

இயல்பானதொரு நன்னாளில்
என்னுள் நீ நுழைந்திருக்க வேண்டும்...
நீ வந்த சுவடு தெரியாது
புது பொம்மை கிடைத்த
குழந்தையைப் போல் குதூகலித்திருந்தேன்...

தனியாளாய் உணர்ந்தேன்
எனக்காக நீயிருக்கிறாய்
என உணரும்வரை...
என் வெற்றியும் என் தோல்வியும்
உந்தன் கையில்தானடி...

பாசத்திற்கு பதில்
பணமென பழகிய நான்
பாசத்திற்கு அர்த்தம் கண்டு
உன் அன்பால்
உனக்கு அடிமையானேன்...

உன் வருகை
என் வாழ்வில் தந்த
திருப்புமுனையை திருத்திக்கொள்ள
தைரியமில்லையடி எனக்கு...
என் வாழ்விலிருந்து
உனை நீக்கும்
உரிமையுமில்லையடி எனக்கு...

நன்றி,

நாணல்




Sunday, 7 June 2009

நன்றி யூத் விகடன்.. :))

ஒரு ரெண்டு மூனு வாரமா நான் படிக்கற ப்ளாக்கர்ஸ் எல்லாம் யூத் விகடன்ல தங்களோட பதிவு வெளியிட்டதை பார்த்து எனக்கும் ஆசை வந்து அனுப்பி வெச்சேன்.. நம்மளோடதை எல்லாம் எங்க வெளியிடபோறாங்கன்னு இருந்தேன்... பார்த்தா வெள்ளி கிழமை வெளியிட்டதா மின்னஞ்சல் வந்திருக்கு...

http://youthful.vikatan.com/youth/nanalpoem02042009.asp

நன்றி யூத் விகடன்.. :))

இந்த மாதிரி எங்க பதிவை வெளியிட்டு எங்களை ஊக்கப்படுத்தறதுக்கு நன்றி ....