உன் தனிமைக்கு
துணையிருக்க
கூட்டத்தில் எனை தொலைத்து
நாமிருவரும் தனிமையில்
தொலையத் தேவையிராது
–00–00–
உன் ஊறுகளின்
பொறுப்பாளியாய் வேடங்கொண்டு
உனை தேற்ற
முயற்சித்து
ஏமாறத் தேவையிராது
–00–00–
உரிமைகளின்
எல்லை வரை தீண்டி
இழந்த தனித்துவத்தை
மீண்டும்
சேகரிக்க தேவையிராது
கா சொ ஏ - 1
நன்றி,
நாணல்
Showing posts with label காதல் சொல்லி. Show all posts
Showing posts with label காதல் சொல்லி. Show all posts
Sunday, 14 November 2010
Monday, 4 October 2010
காதல் சொல்லி ஏற்றுக்கொள்ளப்படாவிடின்..
தூங்காது அடுத்தென்ன
செய்யப்பட வேண்டுமென
காற்றில் திட்டங்கள்
தீட்டிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லை..
@#$%^&
உன்னொருவனு(த்தி)க்காய் நானிருக்கிறேன்
என நம் சந்தோஷத்தின் எல்லையை
ஒரு இதயத்தோடு
சுருக்கிக்கொள்ள
வேண்டிய அவசியமில்லை..
@#$%^&
காரணங்கள் தேடி
கண்ணீருக்கு விடுதலை
தர வேண்டியிருக்காது..
@#$%^&
விலங்குகளால் கட்டுண்டு
மனித விலங்காய்
நடமாட வேண்டியிருக்காது..
நன்றி,
நாணல்
செய்யப்பட வேண்டுமென
காற்றில் திட்டங்கள்
தீட்டிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லை..
@#$%^&
உன்னொருவனு(த்தி)க்காய் நானிருக்கிறேன்
என நம் சந்தோஷத்தின் எல்லையை
ஒரு இதயத்தோடு
சுருக்கிக்கொள்ள
வேண்டிய அவசியமில்லை..
@#$%^&
காரணங்கள் தேடி
கண்ணீருக்கு விடுதலை
தர வேண்டியிருக்காது..
@#$%^&
விலங்குகளால் கட்டுண்டு
மனித விலங்காய்
நடமாட வேண்டியிருக்காது..
நன்றி,
நாணல்
வகை
கவிதை,
காதல் சொல்லி
Subscribe to:
Posts (Atom)