Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Sunday, 30 October 2011

ந‌க‌ர‌த்துப் பெருவிழாக்க‌ள்!

உறவுகளின் மேன்மை மறந்து
‌நம்மை மட்டுமே சார்ந்த ஆசைகளோடு
நெரிசலான கடைவீதிகளில் உலாவும் நாம்,
ஊர் கூடி உறவு பேண‌‌
வர‌வேற்கப்பட‌வேண்டிய‌ பெருவிழாக்களை,
அன்புள்ளங்களின் அரவணைப்பிற்குப் பதிலாய்
காவல்துறையினரின் பலத்த பாதுகாப்போடும்
பட்டறிந்தோரின் கண்காணிப்பிற்குப் பதிலாய்
கண்காணிப்பு நிழற்படவியின் அடியிலும் தானே
வர‌வேற்கின்றோம் நகரத்துப் பெருவிழாக்களை!

%$^&@#$

ரகசியக்கண்கள் பொருந்திய‌
கண்காணிப்பு நிழற்படவிக்கு
ரகசியக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தால்,
சில விபத்துக்களும்
பல குற்றங்களும்
தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

ந‌ன்றி,
நாண‌ல்


Thursday, 31 December 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....


பகலில் தெரியும்
நிலவைப் போல்
இப்பூவுலகில் எல்லாமும்
உன் கண் முன்னே
தான் கொட்டியிருக்கு...
பார்க்கும் உன் பார்வையையும்
தேடும் உன் இடத்தையும்
கொஞ்சம் விடாமுயற்சியோடு
திருத்திக் கொண்டேயிரு...
உன் தேடலுக்கு
விடை பிறக்கும்....


அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


நன்றி,
நாணல்