Showing posts with label உரையாடல் கவிதைப் போட்டி. Show all posts
Showing posts with label உரையாடல் கவிதைப் போட்டி. Show all posts

Tuesday, 29 December 2009

என் தாயவள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக

என்னைத் தாலாட்டி
உறங்க வையடி நீ,
என்னைத் தாயாக்காதே,
தாலாட்டு பாடிட
தெரியாதம்மா எனக்கு!

பனிச் சிற்பம்
போல் நீ
இருந்தால் போதும்,
நீ உருக வேண்டாம்,
உனக்காக நான்
உருகுவேனடி !

என்னை உருவாக்கியவள்
தாயாயின்,
எனக்கு உருதந்தவகையில்
நீயும் எனக்கு
தாய்தானம்மா !

என்னைக் காத்தவளே..
எனக்காகக் காத்திருப்பவளே...
எனை மட்டும் காத்திரு,
எனக்காக மட்டும் காத்திரு !

நேசங் கொண்ட
தோழியாய்
பாசங் கொண்ட
காதலியாய்
உனை இழக்க
நான் துணிந்தாலும்,
தாலாட்டும் தாயாய்
எங்கனம் இழப்பேன் !!

நன்றி,
நாணல்