Saturday 9 April 2011

வ‌ழிய‌னுப்புகிறேன் நானே!

பல‌ வண்ண
பள்ளிச் சீருடைகளை
எனக்கு அணிவித்து,
சின்ன‌ச் சின்ன‌
காலுறைக‌ளுக்குள்
என் பிஞ்சுக் கால்களைத் திணித்து,
அழுது வடிந்த கண்களுடன்
புத்த‌க‌ப் பையை
தூக்கிக்கொண்டு
நான் ப‌ள்ளி செல்லும்
முதல் நாளன்று,
எனக்கு கையசைத்து விடைகொடுத்து
வழியனுப்ப நீயிருக்கமாட்டாயென‌த்
தெரியும் தாயே!

பல‌ வ‌ண்ண‌
மேல்நாட்டு ஆடைக‌ள்
அணிந்து,
அத‌ற்கேற்றார் போன்ற
காலுறைக‌ளுக்குள்
உன் அவ‌ச‌ர‌த்தையும்
என் நினைப்பையும்
மாட்டிக்கொண்டு
தூக்கம் மிச்சமிருந்த கண்களுடன்
ம‌திய‌ உண‌வுப் பையைக்
கையில் தூக்கிக்கொண்டு
எனைப் பார்த்து கைய‌சைத்துக் கொண்டே
அலுவ‌ல‌க‌ம் செல்லும் உன‌க்கு
கைய‌சைத்து விடைகொடுத்து
வ‌ழிய‌னுப்பி வைக்கின்றேன்
தின‌மும்…
இன்றாவது,
என் இர‌வு தூக்க‌த்திற்கு
முன் நீ வ‌ருவாயென‌!

ந‌ன்றி,
நாண‌ல்

4 comments:

நட்புடன் ஜமால் said...

அத‌ற்கேற்றார் போன்ற
காலுறைக‌ளுக்குள்
உன் அவ‌ச‌ர‌த்தையும்
என் நினைப்பையும்
மாட்டிக்கொண்டு ]]

வரிகளின் ஆழம் அதிகம்.

மொத்த கவிதையின் பொருளோ ...

நாணல் said...

நன்றி ஜமால்... :)

Shanmugasundaram said...

மிகவும் அருமையான கவிதைகள் ...

நாணல் said...

நன்றி Shanmugasundaram :)