Tuesday 29 December 2009

என் தாயவள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக

என்னைத் தாலாட்டி
உறங்க வையடி நீ,
என்னைத் தாயாக்காதே,
தாலாட்டு பாடிட
தெரியாதம்மா எனக்கு!

பனிச் சிற்பம்
போல் நீ
இருந்தால் போதும்,
நீ உருக வேண்டாம்,
உனக்காக நான்
உருகுவேனடி !

என்னை உருவாக்கியவள்
தாயாயின்,
எனக்கு உருதந்தவகையில்
நீயும் எனக்கு
தாய்தானம்மா !

என்னைக் காத்தவளே..
எனக்காகக் காத்திருப்பவளே...
எனை மட்டும் காத்திரு,
எனக்காக மட்டும் காத்திரு !

நேசங் கொண்ட
தோழியாய்
பாசங் கொண்ட
காதலியாய்
உனை இழக்க
நான் துணிந்தாலும்,
தாலாட்டும் தாயாய்
எங்கனம் இழப்பேன் !!

நன்றி,
நாணல்

7 comments:

S.A. நவாஸுதீன் said...

நல்ல கவிதை நாணல். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

என்னை தாயாக்கதே - எழுத்துப் பிழையை சரி செய்யவும்

நட்புடன் ஜமால் said...

வெற்றியடைய வாழ்த்துகள்

நாணல் said...

நன்றி நவாஸுதீன் , பிழை திருத்திவிட்டேன்... :)

நன்றி ஜமால் :)

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க வெற்றிபெற மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்

Sakthi said...

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்