Wednesday 4 August 2010

அன்றும் இன்றும்..

யாரும் தெரியாத
யாரென்று புலப்படாத
வாழ்வை படிக்க வந்த மாணவர்களாய்
புத்தக சுமைகள் தவிர
சுமையேதுமில்லாத பருவமாய்
கனவுகளுக்காக உறங்கி
கவிதைகளாக வாழ்ந்தோம் அன்று


வானுயர்ந்த கட்டிடங்களும்
கையடக்க செல்பேசியும்
தொலைத்தபட்டியல் தேட கூகிளும்
என்றாவது அழைக்கும் நண்பனிடமும்
“எப்படா கல்யாணம்”
“என்னடா விசேடம்”
எனத் தொலைந்த உரையாடல்களுக்கும்
தொலைத்த நட்பிற்கும்
அடையாளம் தேடுகின்றோம் இன்று


“கால ஓட்டத்தில் ஆளுக்கொரு திசையென சிதறிக்கிடந்தாலும் ஆர அமர என்றாவது ஒரு நாள் நினைத்துப் பார்க்கையில் பல நல்ல உள்ளங்களின் நட்பு மனதிற்கு ஆறுதல் தருகிறது…அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி…அனைவருக்கும் நண்பர்கள் வார வாழ்த்துக்கள்… “


நன்றி,
நாணல்

2 comments:

Unknown said...

நாணல் அருமை! எங்கே பிரிந்தாலும் காற்று கரைவதில்லை.. எங்கே இருந்தாலும் நட்பு குறைவதில்லை! அன்பு வாழ்த்துக்கள்!

நாணல் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வைகறை :)