Sunday 23 January 2011

ரகசிய சினேகிதனே…

தினம் பேசும் தோழிக்கு
ஏனோ இப்போதெல்லாம்
நான் பேசுவது புரிவதில்லையாம்
அவளுக்கெப்படி சொல்வேன்
என்னுள் இருக்கும் நீ
தான் இப்போதெல்லாம்
என்னையும் மீறி அதிகம்
பேசிக்கொண்டேயிருக்கிறாய் என

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

செல்லப் பெயர்கள்
பல கொண்டு விளித்தும்
ஊடல் பொழுதுகளில்
மெளனமாக உனைக் கொல்லும்
விழிகளின் விளிப்பு தான்
பிடிக்குமென்கிறாய் நீ

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

வேற்றுமைகளற்ற வேற்றுகிரக
மனிதர்களாய்
நம் முன்னோடிகளான
ஆதிவாசிகளாய் அலைகின்றோம்
நம்மை மறந்து
நாம் மறைந்த நேரங்களில்

முந்தைய பதிவு - 1

நன்றி,
நாணல்



2 comments:

அன்புடன் நான் said...

செல்லப் பெயர்கள்
பல கொண்டு விளித்தும்
ஊடல் பொழுதுகளில்
மெளனமாக உனைக் கொல்லும்
விழிகளின் விளிப்பு தான்
பிடிக்குமென்கிறாய் நீ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥//

இந்த வரிகள் மிக வலிமையா இருக்குங்க...பாராட்டுக்கள்.

நாணல் said...

நன்றி கருணாகரசு, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் :)