“வர வர
உன் சமையலின் பக்குவம்
கூடிக்கொண்டேயிருக்கிறது”,
என
புகழும் தாய்க்கு,
எப்படி சொல்லுவேன்
உன்னுடன் பேசிக்கொண்டே
சமைக்கும் போது மட்டுமே
சுவையும் கூடுகின்றதென்று!
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
வாசலில் நின்று கொண்டே
அவ்விலாசத்தைக் கையிலேந்தி
விசாரித்துக் கொண்டிருப்பவளைப் போல்
என்னுள் இருக்கும்
உன்னையறியாது
காதலைக் கையிலேந்தி
விசாரித்துக் கொண்டிருக்கிறேன் நான்!”
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
“எப்பவுமே இப்படி தானா நீ?”,
என
நீ என்னைக்
கேட்கும் போதெல்லாம்
நீ என்னருகிலே இருந்தால்
மட்டுமே இப்படி
என சொல்ல விரும்பி,
“எப்பவுமே இப்படி தான்”
என மட்டும் சொல்லி
உனை என் காலத்துக்கும்
கட்டிக்கொள்கிறேன்!
முந்தைய பதிவு - 1, 2,3
நன்றி,
நாணல்
2 comments:
உனை என் காலத்துக்கும்
கட்டிக்கொள்கிறேன்!
nice :)
நன்றி ஜமால்... :)
Post a Comment