
உனக்காக உனை
வெறுக்கத்தான் முயல்கிறேன்,
விடிந்ததும் வெளிவரும் கதிரவனாய்
உன் நினைவு
என்னுள் விடியலாய் பிரகாசிக்குதே ..
எனக்காக உனை
நேசிக்கத்தான் முயல்கிறேன்,
இருள் நீக்கும் நிலவாய்
உன் தவிர்ப்பு
என்னுள் பிரகாசமாய் தவிக்குதே ..
உனக்காக உனை
வெறுக்கவா - இல்லை
எனக்காக உனை
நேசிக்கவா..
நன்றி,
நாணல்
நன்றி,
நாணல்
1 comment:
"உனக்காக உன்னை வெறுக்கவா" -- இது ரொம்பவே ஆழமானது". கற்றுக்கரவைக்கணங்கள்" என்ற கோதையின் வரிகளைப்போல. ---வாழ்த்துக்கள்
Post a Comment